search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பேசிய காட்சி.
    X
    நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பேசிய காட்சி.

    போலீசாரை பார்த்து திருநங்கைகள் பயப்பட வேண்டாம்-கமிஷனர் பேச்சு

    முகாமில் கலந்து கொண்ட திருநங்கைகளை தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெற பதிவு செய்யுமாறு வலியுறுத்தபட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவப்பட்டியில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் தொழில் முனைவு ஊக்குவிப்பு முகாம் இன்று மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா தலைமையில் நடந்தது. முகாமில் கலந்து கொண்ட திருநங்கைகளை தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெற பதிவு செய்யுமாறு வலியுறுத்தபட்டது.

    இதில் போலீஸ் கமிஷனர் வனிதா பேசியதாவது:-

    இந்தியாவில் திருநங்கைகளுக்கு என அங்கீகாரம் வழங்கபட்டுள்ளது. அவர்களை பற்றிய உண்மையான அக்கறை எனக்கு உண்டு. திருப்பூரில் சில திருநங்கைகள் சட்டத்திற்கு புறம்பாக நடக்கிறார்கள் என புகார்கள் வந்து கொண்டிருந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தியதில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது தெரியவந்தது. அதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். நீங்கள் சமூக போராளி. 

    உயர் பதவிகளுக்கு வர வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் எங்களிடம் கூறுங்கள். எங்களுடைய விருந்தாளிகள் நீங்கள். எங்களை பார்த்ததும் பயந்து செல்ல வேண்டாம். உயிர் இருப்பதே போராடுவதற்காகத்தான் என்றார். இதில் போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த், ரவி, சமூக நல அலுவலர் மற்றும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×