search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பயிர்களில் பூச்சி தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் அறிவிப்பு

    பயிர்களில் சிலவகை பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதால் வேறுவகை பூச்சி எண்ணிக்கைகள் பெருகி சேதம் ஏற்படுகின்றன.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் தென்னை, கரும்பு, நெல், காய்கறி வகைகள் மற்றும் பயிறு வகைகள் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பயிர் வகைகளில் பூச்சிகள், நோய்கள், களைகள், எலிகள் மற்றும் தானிய சேமிப்பின் வாயிலாக 18 சதவீத அளவில் இழப்பு ஏற்படுகிறது. அதிகளவில் பூச்சி பூஞ்சாண மருந்துகள் உபயோகிப்பதால் பயிரில் தொடர்ந்து பல தீமைகள் ஏற்பட்டும் வருகின்றன.

    எனவே ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கையாள விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பயிர்களில் சிலவகை பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதால் வேறுவகை பூச்சி எண்ணிக்கைகள் பெருகி சேதம் ஏற்படுகின்றன. இதற்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பு ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். நோய் பாதிக்கும் இடங்களில் நெருக்கி நடவு செய்தலை தவிர்க்க வேண்டும். இதனால் இலைகளின் நடுவில் காணும் காற்றின் ஈரப்பதம் குறைந்து நோய் உண்டாகும் சூழ்நிலையை தவிர்க்க முடியும்.வயலில் களைக் கட்டுப்பாடு செய்ய வேண்டும். களை எடுக்கும்போது காய்ந்த இலைகளையும் அகற்ற வேண்டும். இதன் வாயிலாக நோய் காரணிகளை நீக்க முடியும் என்றனர்.
    Next Story
    ×