search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    மண்டபம்-ராமேஸ்வரம் இடையே 14-ந்தேதி வரை ரெயில் சேவை ரத்து

    இன்று இரவு 8.25 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம்- எழும்பூர் சிறப்பு ரெயில் ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரத்து செய்யப்பட்டது.


    பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 14-ந்தேதி வரை தற்காலிகமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மண்டபம்- ராமேஸ்வரம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    காலி ரெயில் பெட்டிகள் மட்டும் செல்ல அனுமதிக் கப்பட்டுள்ளது. பின்வரும் 7 ரெயில் சேவைகள் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    1. நேற்று மாலை 5.45 மணிக்கு புறப்பட்ட வேண்டிய எழும்பூர்-ராமேஸ்வரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் மண்டபம்-ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்பட்டது.

    2. நேற்று இரவு 7.15 மணிக்கு புறப்பட்ட எழும்பூர்- ராமேஸ்வரம் சிறப்பு ரெயில் மண்டபம்- ராமேஸ்வரம் இடையே ரத்து.

    3. இன்று இரவு 8.25 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம்- எழும்பூர் சிறப்பு ரெயில் ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரத்து செய்யப்பட்டது. இந்த ரெயில் மண்டபத்தில் இருந்து இரவு 8.52 மணிக்கு புறப்படும்.

    4. இன்று மாலை 5.10 மணிக்கு ராமேஸ்வரம்- எழும்பூர் சிறப்பு ரெயில் ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரத்து செய்யப்பட்டது. இந்த ரெயில் மண்டபத்தில் இருந்து மாலை 7.40 மணிக்கு புறப்படும்.

    5.இன்று காலை 11.55 மணிக்கு திருப்பதி-ராமேஸ்வரம் புறப்பட்ட சிறப்பு ரெயில் நாளை காலை 5.5 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும். இந்த ரெயில் மண்டபம்- ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மண்டபம் வரை மட்டுமே செல்கிறது.

    Next Story
    ×