search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆபத்தான பாறைக்குழிகளை ஆய்வு செய்ய வேண்டுகோள்

    மாவட்டத்தின் பல பகுதிகளில் பாறைக்குழிகள் உரிய பாதுகாப்பு ஏற்படுத்தப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளன.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், ஊத்துக்குளி, உடுமலை பகுதிகளில் கல்குவாரிகள் ஏராளமானவை உள்ளன. தனியார் நிலங்களில் உள்ள பாறைக்குழிகள் தவிர வருவாய் துறைக்குச்சொந்தமான இடங்களில் உள்ள பாறைக்குழிகளில் கல்குவாரிக்கு அனுமதிக்கப்படுகிறது.

    மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள இதுபோன்ற பாறைக்குழிகள் உரிய பாதுகாப்பு ஏற்படுத்தப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளன. பெரும்பாலான பாறைக்குழிகளில் நீர் நிரம்பி நிற்கிறது.பாறைக்குழியில் விழுந்து பலியாவோர், அதிகரித்து வருகின்றனர்.பூமலூர், பள்ளிபாளையம் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு அக்கா, தம்பி பலியான பாறைக்குழி பெரிய அளவில் உள்ளது. கடந்த 10 ஆண்டுக்கும் மேல் இது பயன்படுத்தாமல் உள்ளது. இந்த குழியில் மட்டும் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.எனவே அங்கு ஆய்வு செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    இதுகுறித்த பல்லடம் தாசில்தார் தேவராஜ் கூறுகையில்,  

    பாறைக்குழியின் உரிமையாளருக்கு அங்கு உரிய கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.மற்ற பகுதியிலும் உரிய ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×