search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தொழிற்சங்கத்தினர் நாளை ஆர்ப்பாட்டம்

    அனைவருக்கும் கட்டணமின்றி இருமுறை கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டுக் கூட்டம் திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. சங்க பொருளாளர் பி.ஆர். நடராஜன் தலைமை தாங்கினார். சேகர் (ஏ.ஐ.டி.யு.சி.), ரங்கராஜன் (சி.ஐ.டி.யு.), ரங்கசாமி (எல்.பி.எப்.), சிவசாமி (ஐ.என்.டி.யு.சி.), முத்துசாமி (எச்.எம்.எஸ்.), மனோகர் (எம்.எல்.எப்.) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    டெல்லியில் 200 நாட்களுக்கு மேல் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள் மற்றும் 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டங்களை திரும்ப பெறவேண்டும். விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்க வேண்டும். 

    குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்திய மக்கள் அனைவருக்கும் கட்டணமின்றி இருமுறை கொரோனா தடுப்பூசி செலுத்தவேண்டும். வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 26-ந்தேதி(சனிக்கிழமை ) காலை 10 மணிக்கு திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. 

    அன்றைய தினம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மற்றும்  உடுமலை ஆகிய இடங்களில் விவசாய சங்கங்கள் நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×