search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விழுப்புரத்தில் புதிய உச்சம் - ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விற்பனை

    தமிழகத்தில் கடந்த மே மாதம் ஆரம்பத்தில் இருந்தே பெட்ரோல்- டீசல் விலை படிப்படியாக உயரத்தொடங்கியது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 முறைக்கும் மேல் பெட்ரோல்- டீசல் விலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது
    விழுப்புரம்:

    பொதுத்துறையை சேர்ந்த பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல்- டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

    அதன்படி தமிழகத்தில் கடந்த மே மாதம் ஆரம்பத்தில் இருந்தே பெட்ரோல்- டீசல் விலை படிப்படியாக உயரத்தொடங்கியது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 முறைக்கும் மேல் பெட்ரோல்- டீசல் விலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 8 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் டீசல் 94.20 ரூபாய்க்கும் விற்பனையானது. பவர் பெட்ரோல் ரூ.102.67-க்கு விற்றது.

    விழுப்புரத்தில் முதன் முறையாக ரூ.100-ஐ கடந்து பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டதால் நேற்று வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகள், அதன் விலையை பார்த்ததும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
    Next Story
    ×