search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 51ஆயிரம் டன் கரும்பு அரவை

    விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் கரும்பு முன்பதிவு செய்வது ஆலையின் நடைமுறையாகும்.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை அரவை பருவமாகும். அரவை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் கரும்பு முன்பதிவு செய்வது ஆலையின் நடைமுறையாகும்.

    இந்த அடிப்படையில் நடப்பாண்டு அரவைக்கு 71 ஆயிரம் டன் கரும்பு பதிவானது. இதை அடிப்படையாக வைத்து ஏப்ரல் 16-ந்தேதி கரும்பு அரவை தொடங்கியது.பழனி, நெய்க்காரப்பட்டி, கொமரலிங்கம், கணியூர், மடத்துக்குளம், உடுமலை பகுதியில் விளைந்துள்ள கரும்புகள் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்களால் வெட்டப்பட்டு டிராக்டர், லாரிகளில் எடுத்து வரப்படுகின்றன. அரவை தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது வரை 51 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×