search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர் இருப்பு 10 நாளில் 6 டி.எம்.சி. சரிவு

    கர்நாடக அணைகளில் இருந்து வரும் தண்ணீர் மேட்டூரை அடைந்ததும் அணை நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் நாளை (புதன்கிழமை) மேட்டூர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். இந்த அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    அணை திறக்கப்பட்ட அன்று நீர்மட்டம் 96.81 அடியாகவும், நீர் இருப்பு 60.78 டி.எம்.சி.யாகவும் இருந்தது. தற்போது டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 89.96 அடியாகவும், நீர்இருப்பு 52.60 டி.எம்.சி.யாகவும் குறைந்தது. கடந்த 10 நாளில் நீர்மட்டம் 6 அடியும், நீர் இருப்பு 6 டி.எம்.சி.யும் சரிந்துள்ளது. இன்று அணைக்கு வினாடிக்கு 686 கனஅடி நீர் வந்தது.

    கர்நாடக அணைகளில் இருந்து வரும் தண்ணீர் மேட்டூரை அடைந்ததும் அணை நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×