search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உதவும் போலீசார்

    5 சிறப்பு ஆசிரியர்கள், 2 உடற்பயிற்சி ஆசிரியர் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான 20 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    கொரோனா தடுப்பு ஊரடங்கால் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்களின் குடும்பங்கள் தற்போது வருவாய் இழந்து தவித்து வருகின்றன. இக்குடும்பத்தினருக்கு, ‘மை இண்டியா மை ஸ்கூல்’ குழு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. இதனை திருப்பூர் மாநகர சிறப்பு புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உருவாக்கி நடத்தி வருகிறார்.  

    இது குறித்து அவர் கூறுகையில், 

    ஊரடங்கில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடக்கின்றன.இருப்பினும் விளையாட்டு, ஓவியம், கராத்தே போன்ற சிறப்பு பயிற்சிகள் முடங்கியே உள்ளது. களப்பணியின் போது உடற்பயிற்சி ஆசிரியர்கள் பலரை காய்கறி வியாபாரிகளாக ஓட்டல் கேஷியராக, கட்டிட தொழிலாளராக, டீ விற்பனையாளராக பார்க்க முடிந்தது. பலர் பனியன் கம்பெனிகளுக்கும் பணிக்கு செல்கின்றனர். 

    இவர்களுக்கு பள்ளி திறந்தால் மட்டுமே உரிய சம்பளம் கிடைக்கும்.அதுவரை முடிந்த உதவிகளை செய்வோமே என துறை சார்ந்த நண்பர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் இணைந்த இக்குழுவை துவங்கினோம். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர், பயிற்சியாளர், சிறப்பு ஆசிரியர்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கி வருகிறோம். 

    இதுவரை 5 சிறப்பு ஆசிரியர்கள், 2  உடற்பயிற்சி ஆசிரியர் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான 20 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், யோகா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார், தடகள பயிற்சியாளர் அழகேசன், உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன், மோகனகிருஷ்ணா என பலர் இச்சேவை பணியில் இணைந்துள்ளனர். ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் 200 கிலோ அரிசி வழங்கியுள்ளார். 
    மீண்டும் பள்ளிகள் திறக்கும் வரையில் இவர்களது பசியை போக்குவது அவசியமானது. உணவுப்பொருட்கள், மருத்துவ உதவி தேவைப்படும் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள்  95854 37621, 98435 12288,97861 25453, 97871 65602 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார். 

    பல்லடம் மேற்கு ராசாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து மகள் மைதிலி (வயது 24).நாமக்கல் அரசு விளையாட்டு மேம்பாட்டு கழகத்தில் வாள்வீச்சு பயிற்சி பெற்ற இவர்  கடந்த 2012 முதல் தேசிய, மாநில போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றார்.அரசு உதவியுடன் போட்டிகளில் பங்கேற்று வந்த மைதிலியால் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க இயலாமல் போனதற்கு அரசு உதவி கிடைக்காமை, குடும்ப சூழல் காரணமாக அமைந்தது.

    இதுகுறித்து மைதிலி கூறுகையில், 

    ‘சாமிக்கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் படித்து பின் ஸ்காலர்ஷிப் மூலம் வாள்வீச்சு பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. சர்வதேச அளவிலான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற கனவு இருந்தது.ஆனால் குடும்ப சூழல், அரசு உதவி கிடைக்காததால் வேறு வழியின்றி எனது வாழ்க்கை பாதை மாறியது. அரசு உதவினால் கூடுதல் பயிற்சி பெற்று சாதிக்க முடியும். மாணவர்களுக்கு வாள்வீச்சு பயிற்சி வழங்க தீர்மானித்துள்ளேன் என்றார். மைதிலி சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×