search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கருணாநிதியின் ஓவியம் வரைந்த மாணவி.
    X
    கருணாநிதியின் ஓவியம் வரைந்த மாணவி.

    98 நிமிடத்தில் கருணாநிதியின் ஓவியம் வரைந்து உலக சாதனை

    கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மாணவர்கள் இந்த ஓவியப்போட்டியில் பங்கேற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
    திருப்பூர்:

    நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளி மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்தை மாணவர்கள் வரைந்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர். 

    கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி ஆகிய 5 நாடுகளை சேர்ந்த 98 மாணவர்கள், 98 இடங்களில் 98 நிமிடத்தில் 98 தரை ஓவியமாக கருணாநிதியின் உருவப்படத்தை வரைந்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனையை படைத்துள்ளனர். 

    இந்த நிகழ்ச்சியை காணொளி காட்சி மூலம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எழிலரசன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டு தங்களது ஓவியத்திறனை வெளிப்படுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கல்பனா கூறுகையில்:

    பள்ளி மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு தனியார் கல்வி அறக்கட்டளை இந்த ஓவியப்போட்டியை நடத்தி உள்ளது. கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மாணவர்கள் இந்த ஓவியப்போட்டியில் பங்கேற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். இது அவர்களின் திறமையை வளர்த்துக்கொள்ளவும் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உந்துகோலாக இருக்கும் என்றார்.
    Next Story
    ×