search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோழிப்பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுமா?

    கோழிப்பண்ணை அமைப்பதில் கூடாரம் அமைக்கவும், தீவனம் வாங்கவும் கணிசமாக தொகை செலவிட வேண்டியுள்ளது.
    பல்லடம்,:

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன்படி கடந்த காலங்களில் பல்வேறு மாவட்டங்களில் கோழிப்பண்ணை அமைக்க பயனாளிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டு வந்தது.

    தற்போது கொரோனாவால் உடுமலை, பல்லடம் சுற்றுப்பகுதி விவசாயிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அத்திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    உடுமலை, பல்லடம்  சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயத்திற்கு இணையாக கால்நடை வளர்த்தல் தொழிலையும் பலரும் மேற்கொள்கின்றனர்.ஊரடங்கு காலத்திலும் இறைச்சி விற்பனை காணப்படுவதால் பலரும் கோழிப்பண்ணை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.ஆனால் கோழிப்பண்ணை அமைப்பதில் கூடாரம் அமைக்கவும், தீவனம் வாங்கவும் கணிசமாக தொகை செலவிட வேண்டியுள்ளது. 

    எனவே திருப்பூர் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய கோழிப்பண்ணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.ஏற்கனவே கோழிப்பண்ணை மேம்பாட்டில் சிறந்து விளங்கினாலும் சிறு விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதன் வாயிலாக கோழி வளர்ப்பில் ஆர்வம் கொள்ளும் புதியவர்கள் பயனடைவர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×