search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    திருப்பூரில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் மோதல்-மறியல்

    வாக்குச்சாவடி மையங்களில் வைத்து தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில் சில இடங்களில் குளறுபடிகள் ஏற்பட்டது.
    திருப்பூர்:

    கொரனோ தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வந்த சூழ்நிலையில் உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது .இச்சூழ்நிலையில் அவற்றை முறியடிக்க கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதே தீர்வு என மத்திய மாநில அரசுகள் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தினமும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.ஆனால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.

    இந்தநிலையில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்குச்சாவடி வாரியாக தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது இதன் மூலம் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது தடுக்கப்படும்.  

    இதையடுத்து இன்று பல்வேறு வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை கண்காணிக்கும் வகையில் சுகாதாரத்துறை அலுவலர்களோடு சேர்த்து ஒவ்வொரு தடுப்பூசி மையத்திற்கும் ஒரு வருவாய் அலுவலரையும் நியமனம் செய்து மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார். 

    இன்று காலை வாக்குச்சாவடி மையங்களில் வைத்து தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், சில இடங்களில் குளறுபடிகள் ஏற்பட்டது. ஒரு சிலருக்கு வேறு மையங்களில் ஓட்டு இருந்ததால் அங்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்ளும்படி அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக தடுப்பூசி மையங்களில் பரபரப்பு நிலவியது. இதனிடையே கருவம்பாளையம் அரசு பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்றிரவு 12 மணியில் இருந்தே பொதுமக்கள் அங்கு காத்திருக்க தொடங்கினர். ஆனால் இன்று காலை  8மணியளவில் தடுப்பூசி ஸ்டாக் இல்லை. இன்று தடுப்பூசி போடப்படாது என அறிவிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×