search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு

    நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ. 44க்கும், நிறை கொழுப்பு பால் ரூ.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    திருப்பூர்

    திருப்பூர் ஆவின் ஒன்றியத்தில் உற்பத்தியாகும் பால் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.மாவட்டத்தின் தேவைகள் குறைவாக இருப்பதால் உபரி பால் அடுத்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.ஆவின் பாலின் விற்பனை விலையை தமிழக அரசு லிட்டருக்கு ரூ.3 குறைத்தது.

    கடந்த மே 16-ந்தேதி முதல் விலை குறைப்பு நடவடிக்கை அமலுக்கு வந்தது. அதன்படி நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ. 44க்கும், நிறை கொழுப்பு பால் ரூ.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.திடீர் விலை குறைப்பு காரணமாக மாவட்டத்தின் பால் விற்பனை 9 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆவின் அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    கடந்த மே 16-ந்தேதி முதல் இம்மாதம் 16-ந் தேதி வரை 6.56 லட்சம் லிட்டர் பால் ரூ. 2.16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நிலைப்படுத்தப்பட்ட பால் 250 மி.லி., பாக்கெட்கள் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 884 லிட்டரும், 1-2 லிட்டர் பாக்கெட் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 317 லிட்டரும் விற்பனையாகியுள்ளது.

    இதேபோல் நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் பாக்கெட் 2 லட்சத்து 35 ஆயிரத்து 984 லிட்டரும் , ஒரு லிட்டர் பாக்கெட் 18 ஆயிரத்து 279 லிட்டர் அளவுக்கும் விற்பனையாகியுள்ளன.

    இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், 

    திருப்பூர் மாவட்டத்தின்பால் விற்பனை விலை குறைக்கப்பட்ட பிறகு 9  சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. நிறை கொழுப்பு பால் பாக்கெட்டுகள் 2 1-2 லட்சம் லிட்டர் அளவுக்கு விற்பனை யாகியுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் 6.56 லட்சம் லிட்டர் பால் ரூ.2.16 கோடி  அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றனர்.
    Next Story
    ×