search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா தடுப்பு பணி-மாநகராட்சி கமிஷனர் அதிரடி ஆய்வு

    கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தினால் திருப்பூரில் 3-வது அலையின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்று திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுள்ள கிராந்தி குமார் பாடி தினமும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கொரோனா நோய் தொற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, அதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார். 

    இந்த நிலையில் 2-வது மண்டலத்திற்குட்பட்ட புதிய பஸ் நிலையம், பிச்சம்பாளையத்தில் உள்ள பழைய மண்டல அலுவலகம், போயம்பாளையத்தில் உள்ள புதிய மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் திடீரென ஆய்வு செய்தார்.

    அங்கு 2-வது மண்டலத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் காய்ச்சல் பாதிப்பு கணக்கெடுக்கும் ஊழியர்கள் தொடர்பான விபரங்களையும், ஊழியர்களுக்கு கடைசியாக எப்போது பயிற்சி வழங்கப்பட்டது என்பது குறித்தும் கேட்டறிந்தார். 

    அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா சளி பரிசோதனை செய்வது அவசியம் என்றும், கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தினால் திருப்பூரில் 3-வது அலையின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர் ஆறுமுகம் உள்பட மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×