search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    நாங்குநேரி ஜெயில் துணை சூப்பிரண்டு ‘சஸ்பெண்டு’

    பணியில் கவனக்குறைவாக செயல்பட்டு ஜாமீன் கிடைக்காத கைதியை விடுவித்தது தொடர்பாக நாங்குநேரி ஜெயில் துணை துப்பிரண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை சிவந்திபட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது52). கடந்த 8-ந்தேதி இவரது தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த பரமசிவன் (42), கட்ட பரமசிவன் (37) ஆகியோர் சாராயம் காய்ச்சினர்.

    அங்கு சென்ற சிவந்திப்பட்டி போலீசார் ராஜா, பரமசிவன், கட்ட பரமசிவன் ஆகிய 3 பேரையும் கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கைதான 3 பேரின் சார்பில் நெல்லை கோர்ட்டில் ஆன்லைன் மூலம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கைதான பரமசிவன் மற்றும் கட்ட பரமசிவன் ஆகிய 2 பேருக்கு மட்டும் 15 நாட்கள் நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

    2 பேரும் தினமும் சிவந்திப்பட்டி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவு கடிதம் நாங்குநேரி சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆன்-லைன் மூலம் அனுப்பப்பட்டது.

    அதனை பெற்றுக் கொண்ட ஜெயில் துணை சூப்பிரண்டு ராஜமாணிக்கம் 2 பேருக்கு மட்டுமே ஜாமீன் கிடைத்துள்ளதை கவனிக்காமல் ராஜாவையும் சேர்த்து 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தார்.

    நேற்று ராஜா உள்ளிட்ட 3 பேரும் சிவந்திப்பட்டி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்றனர். அப்போது ராஜாவுக்கு ஜாமீன் கிடைக்காதது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் பிடித்து மீண்டும் நாங்குநேரி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இது தொடர்பாக பாளை மத்திய சிறை சூப்பிரண்டு சங்கர் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் நாங்குநேரி சிறுவர் சீர்திருத்த பள்ளி துணை சூப்பிரண்டு ராஜமாணிக்கம் பணியில் கவனக்குறைவாக செயல்பட்டு ஜாமீன் கிடைக்காத கைதியை விடுவித்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு சங்கர் உத்தரவிட்டார்.

    Next Story
    ×