search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை குறைவு

    கடந்த சில வாரங்களாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைவாக இருந்ததால் காய்கறி விலை உயர்ந்து காணப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையத்தில் மொத்த காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அதேபோல் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் உழவர் சந்தையும் செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் காய்கறிகளை மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்து வந்தனர்.

    கடந்த சில வாரங்களாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைவாக இருந்ததால் காய்கறி விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகமாக உள்ளது. வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறி விலை படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது.

    ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்போது ரூ.10 குறைந்து ரூ.30க்கும்,பெரிய வெங்காயம் ரூ. 30க்கும், சின்ன வெங்காயம் ரூ.50க்கும் விற்கப்படுகிறது. அதேபோல் வெண்டைக்காய் ரூ.35, புடலங்காய் ரூ. 25, முருங்கை கிலோ ரூ. 70, பீட்ரூட் ரூ.32, முள்ளங்கி ரூ.25 ஆக விலை குறைந்துள்ளது.

    மலை காய்கறியான கேரட் ரூ.50, பீன்ஸ் 80 ரூபாய்க்கும் விற்கிறது. பந்தல் காய்கறி விலை குறையவில்லை அவரைக்காய் ரூ.50, பாகற்காய் ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.25க்கு விற்கிறது. தக்காளி ரூ.10க்கு  விற்கப்படுகிறது. விலை குறைவால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.
    Next Story
    ×