search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

    மத்திய, மாநில அரசின் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனம், பல்கலை, கல்லூரி, பள்ளியில் பணியாற்றியவர் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
    திருப்பூர்:

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய இளைஞர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக 2015-ம் ஆண்டு முதல் மாநில இளைஞர் விருது வழங்கப்படுகிறது. சுதந்திர தினத்தன்று முதல்வரால் தலா 3 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    15 வயது முதல் 35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 2020 ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2021 மார்ச் 31-ந்தேதி வரையிலான சேவை மட்டும் பரிசீலிக்கப்படும். விண்ணப்பிப்பவர் 5 ஆண்டு தமிழகத்தில் வசித்தவராக இருத்தல் அவசியம். மத்திய, மாநில அரசின் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனம், பல்கலை, கல்லூரி, பள்ளியில் பணியாற்றியவர் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. 

    தகுதியானவர்கள் www.sdat.tn.gov.in என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 30-ந்தேதி ஆகும். இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திகொள்ள வேண்டுமென திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×