search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கியது- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

    எந்தெந்த நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு விலக்கு கிடைக்கும் என்பது இன்றைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தின் முடிவில் தெரியவரும்.

    சென்னை:

    கடந்த மே மாதம் 28-ந் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்று நிவாரண பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு அளிப்பது தொடர்பாக மாநில நிதி மந்திரிகள் 8 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது.

    இதன் ஒருங்கிணைப்பாளராக மேகாலயா மாநில நிதி மந்திரி இருந்து வருகிறார். கேரளா, ஒடிசா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநில நிதி மந்திரிகள் இந்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

    இந்த நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    இதில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே காணொலி வாயிலாக பங்கேற்றார்.

    8 பேர் கொண்ட மாநில நிதி மந்திரிகள் குழுவின் அறிக்கை இன்று கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து  எந்தெந்த நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு விலக்கு கிடைக்கும் என்பது இன்றைய கூட்டத்தின் முடிவில் தெரியவரும்.

    Next Story
    ×