search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X
    புகையிலை பொருட்கள் பறிமுதல்

    காரில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது

    காரில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    செஞ்சி:

    செஞ்சி அடுத்த நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள மேல்பாப்பாம்பாடி சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், காருக்குள் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 10 ஆயிரத்து 350 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    காரில் வந்த நபர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த நவாப் மகன் காதர் (வயது 31), தங்கவேல் மகன் அருள் (36) ஆகியோர் என்பதும், திருவண்ணாமலையில் இருந்து கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக காரில் புகையிலை பொருட்களை திண்டிவனத்துக்கு கடத்தி வந்தபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் ஆகியோர் பார்வையிட்டதோடு, புகையிலை பொருட்கள் கடத்தியவர்களை கைது செய்த போலீசாரை பாராட்டினர்.
    Next Story
    ×