search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் அம்மா என்ற வார்த்தை காகிதத்தால் மறைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் அம்மா என்ற வார்த்தை காகிதத்தால் மறைக்கப்பட்டுள்ள காட்சி.

    அம்மா உணவகம் பெயர் காகிதத்தால் மறைப்பு

    சென்னை அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் சிலர் சூறையாடினர். அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று அறிவித்தார்.
    திருப்பூர்:

    ஏழைகளின் பசியை போக்கும் வகையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும்அம்மா உணவகத்தை தொடங்கினார். இங்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான ஏழைகள் பயன்பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், சென்னை அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் சிலர் சூறையாடினர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் அம்மா என்ற வார்த்தை காகிதத்தால் மறைக்கப்பட்டுள்ளது. இதேப்போல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் காகிதத்தால் மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அம்மா உணவகம் மற்றும் கல்வெட்டில் உள்ள ஜெயலலிதாவின் பெயரை மறைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×