search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டுவிட்டர் பதிவுகள்
    X
    டுவிட்டர் பதிவுகள்

    டுவிட்டரில் திடீரென கிளம்பிய ‘ஒன்றிய உயிரினங்கள்’ -கலகலக்கும் பதிவுகள்

    வழக்கமான விமர்சனங்கள் போன்று அல்லாமல் இந்த முறை வித்தியாசமான வழிமுறைகளை நெட்டிசன்கள் கையாண்டுள்ளனர்.
    சென்னை:

    திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்னர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கத் தொடங்கியிருப்பது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. அதேபோல் தமிழகம் என்று அழைக்கக்கூடாது என்றும், தமிழ்நாடு என்று அழைப்பதே சரியானது என்றும் திமுகவினர் கூறுகின்றனர். இதை பாஜகவினர் விமர்சனம் செய்துவருகின்றனர். 

    அந்த வகையில், அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், டைனோசர் கூட தமிழில்தான் பேசியிருந்ததாக சொல்லுவார்கள் போல இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    உயிரினங்கள் பெயரில் டுவிட்டர் பக்கம்

    இந்த பதிவைப் பார்த்ததும் நெட்டிசன்கள் சரமாரியாக பதிலடி கொடுத்தனர். பாஜகவினர் மற்றும் வலதுசாரி அமைப்பினரை கேலி செய்யும் விதமாக  #
    ஒன்றியஉயிரினங்கள்
     என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், வழக்கமான விமர்சனங்கள் போன்று அல்லாமல் இந்த முறை வித்தியாசமான வழிமுறைகளை கையாண்டுள்ளனர். 

    டுவிட்டரில் டைனோசர், சிங்கம், மாடு, நாய், குரங்கு, காண்டாமிருகம் என பல்வேறு விலங்கினங்கள் மற்றும் உயிரினங்களின் பெயரில் கணக்குகள் தொடங்கி, அந்த விலங்குகள் பேசுவதுபோன்று, தாறுமாறான கருத்துக்களை தெறிக்கவிட்டுள்ளனர். இந்த நக்கல், நையாண்டிகளை பலரும் ஷேர் செய்து, தங்கள் கருத்துக்களை பதிவிடுகின்றனர். 
    Next Story
    ×