search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனியன் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்ட காட்சி.
    X
    பனியன் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்ட காட்சி.

    பனியன் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சீல்

    ஊரடங்கு உத்தரவு விதிமுறைப்படி பனியன் நிறுவனங்களில் 10 சதவீத ஊழியர்களுக்குதான் அனுமதி. ஆனால் 30 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
    திருப்பூர்:

    ஊரடங்கு புதிய தளர்வுகள் மூலம் திருப்பூரில் 10சதவீத பணியாளர்களுடன்  பனியன் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பணியாளர்களுடன் இயங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் பனியன் நிறுவனங்களை கண்காணிக்க தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.  

    இந்தநிலையில் திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் தலைமையிலான குழுவினர், அங்கேரிபாளையம் ரோடு, பி.என்.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு பனியன் ஏற்றுமதி நிறுவனம் அரசின் வழிமுறைகளை மீறி இயங்கியது தெரியவந்தது. 

    ஊரடங்கு உத்தரவு விதிமுறைப்படி 10 சதவீத ஊழியர்களுக்குதான் அனுமதி. ஆனால் 30 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக நிறுவனத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×