search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக, சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

    லேசான அறிகுறி, அறிகுறி இல்லாத நோயாளிகள் 3 நாட்களுக்கு பிறகு, 7 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்த பரிந்துரைக்கலாம்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியீட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ்


    2 வகையான நோயாளிகளுக்கும் உடல் நிலையை பொறுத்து மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். லேசான அறிகுறி, அறிகுறி இல்லாத நோயாளிகள் 3 நாட்களுக்கு பிறகு, 7 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்த பரிந்துரைக்கலாம்.

    மிதமான அறிகுறிகள் உள்ள நோயாளிகளை 10 நாட்கள் சிகிச்சைக்கு பின்  டிஸ்சார்ஜ் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×