என் மலர்

  செய்திகள்

  நகை கொள்ளை
  X
  நகை கொள்ளை

  மார்த்தாண்டம் அருகே துஷ்டி வீட்டில் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மார்த்தாண்டம் அருகே துஷ்டி வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  குழித்துறை:

  மார்த்தாண்டத்தை அடுத்த பம்மம், காட்டுவிளையை சேர்ந்தவர் ரெனின்( வயது 32 ). இவரது தந்தை கொரோனா தொற்றால் இறந்து விட்டார். அவரது உடல் அடக்க நிகழ்ச்சி கடந்த 28-ந்தேதி நடந்தது. இதற்காக ரெனின் மற்றும் உறவினர்கள் மூவோட்டுகோணம் சென்றனர். அங்கு இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடந்த பின்னர் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த கம்மல், மாலை, மோதிரம் போன்ற நகைகள் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் அதனை திருடி சென்றுள்ளனர்.

  இது குறித்து ரெனின் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறுதி சடங்குக்கு சென்ற பின்னர் வீட்டில் இருந்த உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுப்போன நகையின் மதிப்பு ஒரு லட்சத்து 90 ஆயிரம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

  Next Story
  ×