என் மலர்

  செய்திகள்

  மழை
  X
  மழை

  தென்மேற்கு பருவமழை-முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென் மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள திருப்பூர் மாவட்டத்தில் தாலுகா தோறும் கட்டுப்பாட்டு அறை, கிராமம் தோறும் அரசுத்துறை குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
  உடுமலை:

  திருப்பூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள  மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி கோட்டாட்சியர், தாலுகா அலுவலகங்களில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட வேண்டும். வெள்ள சேதத்தை சமாளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.வெள்ள சேதம் ஏற்பட்டால், உடனுக்குடன் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
   
  கலெக்டர் அலுவலகத்தில் 1077 என்ற எண் வாயிலாக பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். வெள்ள சேதம் தொடர்பான அறிக்கையை விரைந்து அனுப்பி வைத்து 24 மணி நேரத்திற்குள்  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் அந்தந்த கிராமங்களில் தங்கி வெள்ள சேதம் தொடர்பாக கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும். ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தார்கள்  திருமண மண்டபம், பள்ளி, கல்லூரிகளில் முகாம் அமைக்க வேண்டும்.
   
  முதல் தகவல் அளிப்பவர்கள், மீட்பு அலுவலர்கள் குழுவை அமைத்து  தயார்நிலையில் இருக்க வேண்டும்.உடுமலை, அமராவதி, திருமூர்த்தி அணையில் படகு இயக்குபவர்கள், நீர் மிதவைகள் இயக்குபவர்கள் எண்களுடன் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பிக்க வேண்டும்.
   
  மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும் வகையில் மின் வாரியம் தயாராக இருக்க வேண்டும். மின் வாரியம் ஒவ்வொரு துணை மின்நிலையத்துக்கும் ஜெனரேட்டர் வசதியை செய்து கொள்ள வேண்டும். 

  பொதுமக்களுக்கு குளோரின் கலந்த குடிநீர் வினியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும். வெள்ள சேதத்தின் போது உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள, தீயணைப்புத்துறையினர்  அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். கிராமம் தோறும், பல்வேறு அரசுத்துறை பணியாளர் அடங்கிய குழுக்களை உருவாக்கி பருவ மழையால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்யதயார்நிலையில் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
  Next Story
  ×