search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் சூசையாபுரத்தில் உள்ள கட்டுப்பாடு பகுதி தகரத்தால் மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    திருப்பூர் சூசையாபுரத்தில் உள்ள கட்டுப்பாடு பகுதி தகரத்தால் மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    நோயாளிகள் வெளியே செல்வதை தடுக்க தகரத்தால் அடைப்பு

    திருப்பூரில் கொரோனா நோயாளிகள் வெளியே செல்வதை தடுக்க கட்டுப்பாடு பகுதிகள் தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,880 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பெண்கள் உள்பட 15 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை  379ஆக அதிகரித்துள்ளது.

    தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகம்  உள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மாவட்டத்தில்  40 கட்டுப்பாட்டு  பகுதிகள் இருந்தன. தற்போது 121ஆக அதிகரித்துள்ளது. 

    அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தகரத்தால் மூடப்பட்டுள்ளது.கட்டுப்பாட்டு பகுதிகளில் 36 பகுதிகள் மாநகரில் அடங்கும்.  

    சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 

    பல கட்டுப்பாட்டு மண்டலங்களில் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதாக சுகாதாரத்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதன் காரணமாக கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள வீதிகள் அனைத்தும் தகரத்தால் மூடப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு பகுதிக்குள் வெளியாட்கள் சென்றாலும்,  உள்ளே உள்ளவர்கள் வெளியே சென்றாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
    Next Story
    ×