search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தல்லாகுளம் பெருமாள் கோவில்
    X
    தல்லாகுளம் பெருமாள் கோவில்

    தல்லாகுளம் பெருமாள் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

    மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலின் வளாகத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்து 635-ம், தங்கம் 24 கிராம், வெள்ளி 110 கிராம் இருந்தது.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உபகோவிலானது, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலாகும்.

    இக்கோவிலின் வளாகத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்து 635-ம், தங்கம் 24 கிராம், வெள்ளி 110 கிராம் இருந்தது. உண்டியல் திறப்பின்போது கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, உதவி அதிகாரி ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் பிரதிபா, நாராயணி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சாய் பக்தர்கள் குழுவினர்கள், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
    Next Story
    ×