search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு
    X
    மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு

    மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு - கலெக்டர் தகவல்

    தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகா தலைமையில் நடைபெற்றது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், திட்ட இயக்குனர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 7,372 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 6789 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 589 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 56 பேர் இறந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தினமும் 100 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

    இவ்வாறு கலெக்டர் கார்த்திகா பேசினார்.

    இந்த கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவள்ளி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர் மற்றும் அரசு அலுலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×