search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    மின்தடை குறித்து புகார் செய்தால் சரி செய்ய உடனடி நடவடிக்கை- அதிகாரி தகவல்

    பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் மின்தடை புகார் பதிவு மையம் இயங்கி வருகிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மின்தடை குறித்து புகார் பதிவு செய்தால், அதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான வட்டத்தின் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் மின்தடை புகார் பதிவு மையம் இயங்கி வருகிறது. பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த மின்நுகர்வோர்கள் தங்களது பகுதியில் மின்தடை ஏற்பட்டால் அது குறித்து கட்டணமில்லாத தொலைபேசி எண் 1912 மற்றும் 18005992912 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மின்தடை புகாரை பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்தால் மின்வாரிய ஊழியர்கள் தங்களது இடம் தேடிவந்து மின்தடையை சரி செய்வார்கள். மேலும் பெரம்பலூரில் உள்ள மின்தடை புகார் மையத்தில் மின்வாரிய உதவி மின்பொறியாளருக்கு 9498392129 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், 04328224055 மற்றும் 70949 66709 என்ற எண்களிலும் புகார் தெரிவிக்கலாம்.

    மின்கம்பங்கள் சாய்ந்திருந்தாலும், மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தாலும், மின்கம்பிகள் தாழ்வான நிலையில் இருந்தாலும் 9486111912 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கலாம். மின் விபத்தை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் வீடு, கட்டிடம் கட்டும்போது மின்பாதையில் இருந்து போதிய இடைவெளி விட்டு, கட்டிடம் கட்ட வேண்டும். பொதுமக்கள் மின்பாதைக்கு அருகில் அல்லது மின்பாதைக்கு கீழ் மரங்களை வளர்ப்பதை தவிர்த்து, இதனால் உண்டாகும் மின் விபத்துகளை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×