search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாரப்பகவுண்டர் - சித்தாபுதூர் வாக்குச் சாவடிக்கு வீல்சேரில் வந்த மாற்றுத்திறனாளி.
    X
    மாரப்பகவுண்டர் - சித்தாபுதூர் வாக்குச் சாவடிக்கு வீல்சேரில் வந்த மாற்றுத்திறனாளி.

    1952-ம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும் ஓட்டுப் போட்ட 105 வயது முதியவர்

    கோவை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 62 ஆயிரம் பேர், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 18 ஆயிரம் பேர் உள்ளனர்.
    கோவை:

    கொரோனா தொற்று காரணமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று இந்த தேர்தலில் முதன் முறையாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை யொட்டி மாவட்டம் முழுவதும் 7,854 முதியவர்களும், 605 மாற்றுத்திற னாளிகளும் தபால் வாக்கு வேண்டும் என்று கோரினர். மற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

    இந்த நிலையில் தபால் ஓட்டுபோடாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நேற்று வாக்குச்சாவடிக்கு நேரடியாக வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதியவர்கள், உறவினர்கள் உதவியுடனும், கம்புகளை ஊன்றியபடியும் வந்து வாக்கை பதிவு செய்தனர். மாற்றுத்திறனாளிகள் பலர் வீல்சேரில் வந்து வாக்களித்தனர்.

    கோவை கருப்பராயன்பாளையத்தைச் சேர்ந்த மாரப்பகவுண்டர் 1916-ம் ஆண்டு ஜூன் மாதம் 1 -ந் தேதி பிறந்தவர். தற்போது அவரது வயது 105. இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். இந்த நிலையில் மாரப்பகவுண்டர் தள்ளாத வயதிலும் தனது வீட்டில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடந்தே வந்து வாக்களித்தார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 105 வயது முதியவர் தனது ஜனநாயக கடமையாற்ற வந்ததை அறிந்து அதிகாரிகள் பாராட்டினர். மேலும் சில வாக்காளர்கள் அவருடைய காலில் விழுந்து ஆசி பெற்றனர். வாக்களித்து விட்டு வெளியே வந்த மாரப்பகவுண்டர் கூறும் போது, நான் 1952-ம் ஆண்டு முதல் நடைபெற்ற எல்லா தேர்தலிலும் ஓட்டு போட்டு வருகிறேன். காமராஜர் மற்றும் காந்தியடிகள் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உள்ளேன்.

    மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றார்.முட்டத்துவயல் அருகே பச்சாம்வயல் பகுதியை சேர்ந்த 95 வயது மூதாட்டி வெள்ளையம்மாள் உறவினரின் துணையுடன் வந்து ஓட்டு போட்டார்.கோவைப்புதூரை சேர்ந்த 80 வயது முதியவர் சேஷாத்ரி தனது மனைவியுடன் வந்து ஆர்வமுடன் ஓட்டு போட்டார்.குனியமுத்தூர் பகுதியில் 80 வயதான மூதாட்டி நளினி தனது வயதில் உறவினர்களுடன் வந்து வாக்களித்தார். இது குறித்து முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கூறும்போது, வீட்டுக்கே வந்து தபால் வாக்கு செலுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி னர். ஆனால் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பது தான் மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.
    Next Story
    ×