search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    அரூர் பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.130 ரூபாய்க்கு விற்பனையான 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி நேற்று 80 ரூபாய்க்கு விற்பனையானது.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு, மொரப்பூர், கம்பைநல்லூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். தற்போது சந்தை மற்றும் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அரூர் பகுதியில் விளைச்சல் அதிகரித்துள்ளதால் மண்டிகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.130 ரூபாய்க்கு விற்பனையான 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி நேற்று 80 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரையாக ஒரு கிலோ ரூ.3-க்கு விற்பனையானது. தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறினர்.
    Next Story
    ×