என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  ராமேசுவரத்தில் இலங்கை வாலிபர்கள் 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமேசுவரத்தில் இலங்கை வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ராமேசுவரம்:

  ராமேசுவரம் கடலோர பகுதியில் சுங்கத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சந்கேத்திற் கிடமாக 2 பேர் சுற்றிதிரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

  அப்போது அவர்கள், இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதாப் (வயது29), நாதேஷ் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் ஏன் ராமேசுவரம் வந்தார்கள் என்று தெரிய வில்லை.

  அவர்கள் கூறும்போது, தங்களது உறவினர்கள் பழனியில் உள்ள அகதி முகாமில் தங்கி உள்ளனர். நாங்கள் கஷ்டப்படுவதை உணர்ந்து இங்கு வந்தால் வேலை வாங்கி தருவதாக கூறினார்கள்.

  அதை நம்பி படகு மூலம் இங்கு வந்தோம். எங்களை ஏற்றி வந்த படகு 2 பேரையும் இறக்கி விட்டு சென்று விட்டனர் என்று தெரிவித்தனர்.

  அவர்கள் சொல்வது உண்மையா? என்பது தெரியவில்லை. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேரையும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×