search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு ரெயில்
    X
    சிறப்பு ரெயில்

    கன்னியாகுமரி-ஹவுரா சிறப்பு ரெயில் ஏப்.3 முதல் இயக்கம்: தெற்கு ரெயில்வே தகவல்

    கன்னியாகுமரி-ஹவுரா வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் கன்னியாகுமரியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு ஹவுரா சென்றடையும்.
    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ரெயில் எண்.02666 கன்னியாகுமரி-ஹவுரா வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் கன்னியாகுமரியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு ஏப்ரல் 3-ந்தேதி முதல் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு ஹவுரா சென்றடையும்.

    மறு மார்க்கத்தில் ரெயில் எண்.02665 ஹவுரா-கன்னியாகுமரி வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் ஹவுராவில் இருந்து திங்கட்கிழமைகளில் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் மாலை 4.15 மணிக்கு புறப்படுவது புதன்கிழமைகளில் காலை 10.50 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயிலில் ஒரு ஏ.சி. 2 டயர், 4 ஏ.சி. 3 டயர், 10. தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகள் இடம்பெறும். நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில் பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல் மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக செல்லும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×