search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் ஆர்வமாக மீன்கள் வாங்கும் காட்சி.
    X
    பொதுமக்கள் ஆர்வமாக மீன்கள் வாங்கும் காட்சி.

    திருப்பூரில் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.700-க்கு விற்பனை

    திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள மீன் சந்தையில் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள மீன் சந்தைக்கு தினமும் சென்னை, தூத்துக்குடி, நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் சந்தைகளில் மீன் விற்பனை மற்ற நாட்களை விட அதிகமாக நடைபெறும். இந்த நிலையில் தற்போது இறால் சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக திருப்பூருக்கு நேற்று 2 டன் இறால் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.

    இது குறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது:-

    ஒரு கிலோ இறால் ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக கடலுக்கு செல்கிற மீனவர்களுக்கு விசைப்படகுகள் உள்பட படகுகளுக்கான எரிவாயு செலவு அதிகரித்துள்ளது. இதனால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. வழக்கத்தை விட மீன்கள் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்ந்து காணப்பட்டன. அதன்படி நேற்று ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.700-க்கும், வாவல் மீன் ரூ.600-க்கும், விள மீன் ரூ.500-க்கும், ஊழி மீன் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×