search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் சந்தை"

    • மாவட்ட கலெக்டருக்கு ஊராட்சி மன்றம் கோரிக்கை
    • உப்பளமானது ஏற்கனவே மத்திய அரசுக்கு சொந்தமானது.

    ராஜாக்கமங்கலம் :

    ராஜாக்கமங்கலம் உப்பளத்தில் கடந்த 30 வருடங்களாக மீன் சந்தை இயங்கி வருகிறது. இதில் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் மீன் மற்றும் காய்கறிகள் இதர பொருட் களை வாங்கி செல்வது வழக்கம். கடந்த 2 நாட்க ளுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் அது தங்களுடைய சொத்து என்று ஆக்கிரமித்து அங்கு யாரும் செல்லக்கூடாது என ரோட்டோரத்தில் கால்வாய் தோண்டியுள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    இந்த மீன் சந்தையில் வியாபாரம் செய்வதற்கு வசதியாக கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் அப்போ தைய எம்.எல்.ஏ. முருகேசன் தொகுதி வளர்ச்சி திட் டத்தின் கீழ் ரூ.2.52 லட்சம் மதிப்பில் கொட்டகை அமைத்து அதில் அப்பகுதி மக்கள் வியாபாரம் செய்து வருகின்ற னர். அந்த உப்பளமானது ஏற்கனவே மத்திய அரசுக்கு சொந்தமானது.

    அதனை 99 வருட குத்தகைக்கு ஒரு சிலருக்கு அரசு கொடுத்தது. குத்தகை காலமும் முடிந்து தற்போது குத்தகையையும் கொடுக்கவில்லை. இதை திடீரென இவ்வாறு ஆக்கிரமித்ததால் ஊராட்சி சார்பில் அங்கு தோண்டப்பட்ட குழிகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் மண்ணை நிரப்பி மீண்டும் அப்பகுதியில் வியாபாரம் நடக்கும் படி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார் செய்துள்ளார். மேலும் மீண்டும் அரசு நிலத்தை ஆக்கிரமிக்காமல் இருக்கும் வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுத்திட மாவட்ட கலெக்டருக்கு ஊராட்சி மன்றம் சார்பில் அவர் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

      கன்னியாகுமரி :

      கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

      கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல், கீழ்குளம் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், கருங்கல் மீன்சந்தையை நவீன வசதிகளுடன் மேம்பாடு செய்து சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். நான் கருங்கல், கீழ்குளம் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், கருங்கல் மீன்சந்தையை நவீன வசதிகளுடன் மேம்பாடு செய்து சீரமைக்கவும் கேட்டு முதல்-அமைச்சர், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர், அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன்.

      அதனடிப்படையில் கருங்கல், கீழ்குளம் பேரூராட்சிகளில் மிகவும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், கருங்கல் மீன்சந்தையை நவீன வசதிகளுடன் மேம்பாடு செய்யவும் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம், சிறப்பு சாலைகள் திட்டம் மற்றும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.3 கோடியே 62 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டு நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

      எனவே சாலை பணிகள் அனைத்துக்கும் சில வாரங்களில் டெண்டர் விடப்பட்டு பணிகள் உடனடியாக தொடங்கி சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • மீன் சந்தைகளில் வெளியூர் மீன் வியாபாரிகளின் கூ ட்டம் அலைமோதுகிறது
      • 700 ரூபாய் இருந்த ஒரு கிலோ வஞ்சிரம் மீன் 1000 ரூபாய்

      கன்னியாகுமரி :

      கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க த்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தே தி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இரு க்கும். இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

      இந்த தடை காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 19-ந்தேதி முதல் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுப ட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கட லுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றன.

      இதற்கிடையில் அந்த விசைப்படகுகளுக்கு இணையாக கன்னியாகுமரி பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வள்ளம் மற்றும் நாட்டு படகுகளிலும் ஏராளமான உயரக மீன்களும் ஆழ்கடலில் இருந்து பிடித்துக்கொண்டு வரப்படுகின்றன.

      தற்போது கன்னியகுமரி அருகே உள்ள சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கன்னியாகுமரி, வாவ த்துறை, கீழமணக்குடி, மண க்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் உள்ள சிறிய அளவிலான நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் வஞ்சிரம், விளமீன், பாறை, வாவல் போன்ற உயர்ரக மீன்களை அதிக அளவில் பிடித்து வருகின்றனர்.

      இந்த நாட்டுப்படகு மற்றும் வள்ளங்களில் பிடித்து வரப்படும் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு பிடிக்கப்படும் உயர்ரக மீன்களை ஏலம் எடுப்பதற்காக கடற்கரை கிராமங்களில் உள்ள மீன் சந்தைகளில் வெளியூர் மீன் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் மீன்களின் விலையும் "கிடுகிடு" வென கடுமையாக உயர்ந்து உள்ளது.

      கன்னியாகுமரி கடற்க ரையில் மீன்கள் வந்து இறங்கும் தளத்தில் உள்ள மீன் சந்தையில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்கள் வாங்குவதற்காக குவிந்து இருந்தனர். அதுமட்டுமின்றி மாலையிலும் இந்த மீன்சந்தையில் மீன்கள் வந்து குவிந்தன. மீன் வரத்து அதிகமாக இருந்த பிறகும் நேற்று மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

      700 ரூபாய் இருந்த ஒரு கிலோ வஞ்சிரம் மீன் 1000 ரூபாய்க்கும், 250 ரூபாய் விலைபோன பாரை மீன் கிலோ 350 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற விளமீன் கிலோ 400 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்ற ஊலா மீன் கிலோ 350 ரூபாய்க்கும், 250 ரூபாய் இருந்த சங்கரா மீன் கிலோ 350 ரூபாய்க்கும் விற்பனையானது.

      மீன்பிடி தடை காலம் முடிந்து விசைப்படகுகள் மீன் பிடிக்க சென்ற பிறகும் வள்ளம் மற்றும் நாட்டுப் படகுகளில் பிடித்து கொண்டு வரப்படும் மீன்கள் தூண்டில் மூலம் பிடித்துக்கொண்டு வரப்படுவதால் இந்த உயர்ரக மீன்களுக்கு கடும் மவுசு ஏற்பட்டது. எனவே தான் மீன்களின் விலையும் சற்று உயர்வாகவே காணப்ப டுகிறது என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

      • அலுவலகத்தில் உள்ள பதிவறையில் வைக்கப் பட்டுள்ள ஆவணங்களை பாது காக்கும் வகையில் தனியறை அமைத்து பதிவறை எழுத்தர் மூலம் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்
      • உரக்கிடங்கில் தயார் செய்யப்படும் உரத்தை எடை போட்டு பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும்

      கன்னியாகுமரி :

      கன்னியாகுமரி மாவட் டம், குளச்சல் நகராட் சிக்குட்பட்ட பகுதிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

      குளச்சல் நகராட்சி அலுவலகத்தினை மாவட்ட கலெக்டர் அரவிந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி வளாகத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும், அலுவலகத்தில் உள்ள பதிவறையில் வைக்கப் பட்டுள்ள ஆவணங்களை பாது காக்கும் வகையில் தனியறை அமைத்து பதிவறை எழுத்தர் மூலம் பதிவேடுகளை பராமரிக்க வேண்டுமெனவும், வரி வசூலை தீவிரப்படுத்த வேண்டு மெனவும் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

      அதனைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் குளச்சல் பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் பாலுட்டும் அறையினை தினமும் சுத்தப் படுத்தி, திறந்து வைக்க வேண்டு மெனவும், நவீன படுத்த வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தி னார்கள்.

      மேலும் காய்கறி சந்தை மற்றும் மீன் சந்தையினை ஆய்வு மேற்கொண்டு, அதன் தூய்மை மற்றும் சுற்றுப்புற சுகாதார தன்மையினை உறுதிப்படுத்துமாறு நக ராட்சி ஆணையர் உள்ளிட்ட துறைசார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து உரக்கிடங்கினை ஆய்வு மேற்கொண்டு, உரக்கிடங்கில் தயார் செய்யப்படும் உரத்தை எடை போட்டு பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

      இந்நிகழ்ச்சியில், குளச்சல் நகராட்சி ஆணை யர் ஜீவா. நகராட்சி செயற் பொறியாளர்கள், பொறியாளர்கள் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

      ×