search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைகள் சீரமைப்பு - மீன் சந்தை மேம்பாட்டுக்காக ரூ.3½ கோடி நிதி ஒதுக்கீடு
    X

    சாலைகள் சீரமைப்பு - மீன் சந்தை மேம்பாட்டுக்காக ரூ.3½ கோடி நிதி ஒதுக்கீடு

      கன்னியாகுமரி :

      கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

      கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல், கீழ்குளம் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், கருங்கல் மீன்சந்தையை நவீன வசதிகளுடன் மேம்பாடு செய்து சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். நான் கருங்கல், கீழ்குளம் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், கருங்கல் மீன்சந்தையை நவீன வசதிகளுடன் மேம்பாடு செய்து சீரமைக்கவும் கேட்டு முதல்-அமைச்சர், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர், அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன்.

      அதனடிப்படையில் கருங்கல், கீழ்குளம் பேரூராட்சிகளில் மிகவும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், கருங்கல் மீன்சந்தையை நவீன வசதிகளுடன் மேம்பாடு செய்யவும் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம், சிறப்பு சாலைகள் திட்டம் மற்றும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.3 கோடியே 62 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டு நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

      எனவே சாலை பணிகள் அனைத்துக்கும் சில வாரங்களில் டெண்டர் விடப்பட்டு பணிகள் உடனடியாக தொடங்கி சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      Next Story
      ×