search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேட்பாளர்களுக்கு வழங்க வேட்பு மனுக்கள் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம
    X
    வேட்பாளர்களுக்கு வழங்க வேட்பு மனுக்கள் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம

    திருப்பூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வேட்பு மனு - இன்று முதல் வினியோகம்

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனுக்கள் தயார் நிலையில் உள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறகிறது. இதுபோல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வருகிற 12-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குச்சாவடிகள் மூலம் வாக்குப்பதிவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பறக்கும் படை அதிகாரிகளும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தபால் வாக்குப்பதிவுக்கான விண்ணப்பமும் மாவட்டம் முழுவதும் அனுப்பப்பட்டு விட்டது. தற்போது போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனுவும் தயார் நிலையில் உள்ளது.

    இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேவையான வேட்பு மனுக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து இங்கிருந்து சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியும் அந்தந்த தொகுதிகளில் நடந்து வருகிறது.

    தற்போது வேட்பு மனுக்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளலாம். வருகிற 12-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் தற்போது இருந்தே பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×