search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு
    X
    வழக்கு

    தர்மபுரி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் 123 மது பாட்டில்கள் பறிமுதல்- 4 பேர் மீது வழக்கு

    தமிழக சட்டசபை பொதுதேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 123 மது பாட்டில்களை பறிமுதல் செய்து 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.
    தர்மபுரி:

    தமிழக சட்டசபை பொதுதேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தல், மதுபாட்டில்களை கடத்துதல் ஆகிய செயல்களை தடுக்க பறக்கும் படை குழுவினர் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மதுபானம் தொடர்பான குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கார்த்திகா எச்சரித்து உள்ளார். 

    இந்த நிலையில் மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், எச்.புதுப்பட்டி, சாமியாபுரம் ஆகிய பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த லட்சுமி, ராணி, கமலா, முனியப்பன் ஆகிய 4 பேரிடம் இருந்து 123 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    இது தொடர்பாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×