search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றம்
    X
    நீதிமன்றம்

    மனைவியை கொன்ற பேராசிரியருக்கு தூக்கு தண்டனை- சென்னை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

    குடும்பத்தகராறில் மனைவியை கொலை செய்த பேராசிரியருக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை செசன்ஸ் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறி உள்ளது.
    சென்னை:

    சென்னை அண்ணாநகர் செந்தூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கண்ணன் (வயது 41). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மோகனாம்பாள். இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார்.

    இவரது மனைவி வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். கண்ணன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இதன்காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 16.12.2012 அன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது கண்ணன் வீட்டாரை மோகனாம்பாள் கேவலமாக பேசி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன், மனைவி மோகனம்பாளை உரல் கல்லால் தாக்கி உள்ளார். இதில் மயங்கி கீழே விழுந்த மோகனாம்பாளை, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

    இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை சென்னை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் வி.முரளிகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, பேராசிரியர் கண்ணன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு சாகும் வரை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
    Next Story
    ×