என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்குருவின் கருத்துக்கு நான் முற்றிலும் உடன்படுகிறேன்- நடிகர் சந்தானம் ட்வீட்
Byமாலை மலர்27 Feb 2021 11:55 AM GMT (Updated: 27 Feb 2021 11:55 AM GMT)
கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்ற சத்குருவின் கருத்திற்கு உடன்படுவதாக நடிகர் சந்தானம் கூறி உள்ளார்.
சென்னை:
தமிழக கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தி உள்ளார். ‘11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது’ என கூறி உள்ள சத்குரு, இது தொடர்பான வீடியோவையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த டுவிட்டர் பதிவை பலரும் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், சத்குருவின் கருத்திற்கு முற்றிலும் உடன்படுவதாக ட்வீட் செய்துள்ளார்.
‘பல கோவில்களில் ஒருகால பூஜைகூட நடக்காமல் இருப்பதை பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது. அங்கு போதுமான அளவு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு செய்யப்படவில்லை. கோவில்களை பக்தர்களிடமே கொடுத்துவிடுங்கள்’ என சந்தானம் பதிவிட்டுள்ளார்.
Next Story
×