search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    அதிமுக- பாமக கூட்டணி குறித்து நாளை பேச்சுவார்த்தை: அன்புமணி ராமதாஸ்

    வன்னியர்களுக்கு 10.6 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், கூட்டணி குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள்  கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வந்தார். இதனை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என நாடு தழுவிய போராட்டம் ராமதாஸ் தலைமையில் நடத்தப்பட்டது.

    தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பா.ம.க. உடன் கூட்டணி குறித்து அதிமுக அமைச்சர்கள் பேசினர். அப்போது வன்னியர் இடஒதுக்கீட்டில் டாக்டர் ராமதாஸ் பிடிவாதமாக இருந்தார். இதனால் கூட்டணி உறுதிப்படுத்தாமல் இருந்தது.

    இந்த நிலையில்தான் இன்று மதியம் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து நாளை அதிமுக- பாமக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×