search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தென்காசியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பாட்டி, பேத்தி கடத்தி கொலை

    தென்காசியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்காக பாட்டி மற்றும் பேத்தியை கடத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தென்காசி:

    இவரது மனைவி கோமதி அம்மாள் (வயது55). இவர்களது மகள் சீதா என்ற சுப்புலட்சுமி. இவருக்கும் தென்காசி அருகே உள்ள கடப்போ கத்தி பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது மகள் உத்ரா என்ற சாக்ஷி (1½).

    முருகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் அவரது மனைவி சுப்புலட்சுமி தனது மகளுடன் தாய் வீடான கடப்போ கத்தியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் கோமதி மற்றும் அவரது பேத்தி சாக்ஷி ஆகியோர் காணவில்லை.

    இந்நிலையில் கடந்த மாதம் முருகன் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது தனது குழந்தை மற்றும் மாமியார் மாயமானது குறித்து தென்காசி போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கோமதி, சாக்ஷியை தேடி வந்தனர். இது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த பெண் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கோமதி அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கடன் கொடுத்ததாகவும், அதனை அவர் திருப்பி கேட்டதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் கோமதி பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் கோமதி மற்றும் அவரது பேத்தியை கடத்தி கொலை செய்ததாக தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பாட்டி மற்றும் பேத்தியின் உடல்களை சாக்கு மூட்டையில் கட்டி தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையை அடுத்த முத்துமாலைபுரத்தில் காட்டு பகுதியில் வீசியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து இன்று காலை அங்கு சென்ற குற்றாலம் போலீசார் அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் கிடந்த 2 பேரின் உடலையும் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், தென்காசி இன்ஸ்பெக்டர் ஆடிவேல், குற்றாலம் இன்ஸ் பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் நெல்லை தடயவியல் துறை நிபுணர்களும் அங்கு தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக போலீசார் பெண் உள்ளிட்ட 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×