என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  குண்டடம் அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குண்டடம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  குண்டடம்:

  குண்டடம் அருகே உள்ள பொடாரம்பாளையத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி பிரியா. இவர்கள் மகன் சஞ்சய் (வயது 23). சில ஆண்டுகளுக்கு முன் பிரியா இறந்துவிட்டார்.

  இதனால் பாட்டி நீலாவதி வீட்டில் தங்கி படித்து வந்த சஞ்சய் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்து விட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

  தற்போது சரியாக வேலையில்லாததால் மனம் உடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

  இது குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×