என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  பல்லடத்தில் பூட்டை உடைத்து 3 கடைகளில் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லடத்தில் அடுத்தடுத்து 3 கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  பல்லடம்:

  பல்லடம் செட்டிபாளையம் ரோட்டில் அரசு பஸ் பணிமனை நிறுத்தம் எதிரே செல்போன், ஜெராக்ஸ் மற்றும் துணிக்கடைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.பின்னர் செல்போன் கடையில் ரூ.5 ஆயிரம் மற்றும் சில செல்போன்களும், துணிக்கடையில், ஜீன்ஸ் பேண்ட்கள் உள்ளிட்ட துணிகள் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர். இதுபோல் சற்று தொலைவில் உள்ள மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் நிலையத்தில், வெளியே வைக்கப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளின் என்ஜின் மற்றும் இரும்பு பொருட்களையும், திருடிச்சென்றுள்ளனர்.

  இதுகுறித்து கடைக்காரர்கள் பல்லடம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஜெராக்ஸ் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம ஆசாமிகள் 2 பேர் தலையில் குல்லா அணிந்து முகத்தை மறைத்தபடி பூட்டுகளை உடைப்பது பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×