என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  நொய்யல் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நொய்யல் அருகே தாலி சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்களிடம் பெண் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
  நொய்யல்:

  நொய்யல் அருகே பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஒரு பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அப்பெண் கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது தாலிக்கொடியை கெட்டியாக பிடித்துக் கொண்டு அந்த பெண் மர்ம நபர்களிடம் போராடியதுடன் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். 

  அவரது சத்தத்தை கேட்டு அங்கு சிலர் ஓடி வரவே, மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டனர். இதுகுறித்து நொய்யல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பெண்ணிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
  Next Story
  ×