search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கள்ளக்குறிச்சி அருகே போலீஸ் ஏட்டுவை தாக்கி கைதி தப்பி ஓட்டம்

    கள்ளக்குறிச்சி அருகே போலீஸ் ஏட்டுவை தாக்கி கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் கிடைத்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீஸ் ஏட்டுகள் முஸ்தபா, சுப்பிரமணி, சிவராமன் ஆகியோர் நாமக்கல் கிளை சிறையில் இருந்த கைதிகள் சக்கரவர்த்தி (வயது 27), சவுந்தர்ராஜன் (28) ஆகியோரை விசாரிப்பதற்காக கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

    ஆத்தூர் பஸ் நிலையம் வந்ததும், கைதி சக்கரவர்த்தி சிறுநீர் கழிக்க செல்வதாக கூறினார். அதையடுத்து ஏட்டு முஸ்தாபா கைதியை கழிவறைக்கு அழைத்து சென்றார்.

    அப்போது சக்கரவர்த்தி ஏட்டுவை மூர்க்கத்தனமாக தாக்கி விட்டு தப்பிஓடினார். இதில் காயம் அடைந்த முஸ்தபா ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மற்றொரு கைதியான சவுந்தரராஜனை போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

    போலீசை தாக்கி விட்டு தப்பி சென்ற கைதி சக்கரவர்த்தியை தேடி இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் ஆத்தூர் விரைந்துள்ளனர்.
    Next Story
    ×