என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  வீட்டில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெற்குன்றம் அருகே வீட்டில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பூந்தமல்லி:

  சென்னை நெற்குன்றம், மூகாம்பிகை நகரில் உள்ள ஒரு வீட்டில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக கோயம்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் பணம் வைத்து சூதாடியதாக அந்த வீட்டின் உரிமையாளர் நரேஷ் (வயது 35) மற்றும் அங்கு சூதாடியதாக முத்துகுமார் (40), சிவமூர்த்தி (30), ஜெகன் (30), கார்த்திக் (29), பிரேம்குமார் (35), முனியன் (40) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
  Next Story
  ×