search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் நிர்மலாவுக்கு தடுப்பூசி போடப்பட்டபோது எடுத்த படம்.
    X
    இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் நிர்மலாவுக்கு தடுப்பூசி போடப்பட்டபோது எடுத்த படம்.

    இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

    கோவை மாவட்டத்தில் 4 மையங்களில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் 4 மையங்களில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில், முதல் தடுப்பூசி டீன் நிர்மலாவுக்கு போடப்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள், நர்சுகள், சுகாதார முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    இது குறித்து டீன் நிர்மலா கூறும்போது, அனைத்து பணியாளர்களுக்கும் முன்னோடியாக நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்பவேண்டாம். இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் முதல் நாளில் 110 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றார்.இதுபோன்று நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் 385 பேருக்கும், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 98 பேருக்கும், மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் 40 பேருக்கும், காரமடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 355 பேருக்கும் ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது.
    Next Story
    ×