search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    விக்கிரவாண்டியில் கார் மோதி மெக்கானிக் பலி

    விக்கிரவாண்டியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 46). மெக்கானிக்கான இவர் தனலட்சுமி நகரில் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார். இவர் வழக்கம்போல் இரவு வேலை முடிந்ததும் ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். 

    விக்கிரவாண்டி காட்டன் மில் எதிரே உள்ள பைபாஸ் கட்டிங் ரோட்டில் திரும்பிய போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மனோகரன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×