search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொசு
    X
    கொசு

    பரமக்குடி பகுதியில் டெங்கு, டைபாய்டு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிப்பு

    பரமக்குடி பகுதியில் டெங்கு, டைபாய்டு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    பரமக்குடி:

    பரமக்குடி, பார்த்திபனூர், சத்திரக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சில தினங்களாக மேகமூட்டத்துடன் மந்தாரமாக சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனால் பரமக்குடி பகுதி மக்களுக்கு டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலையோரங்களிலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. அந்த மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் காய்ச்சல் பரவி வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

    இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக டாக்டர்களிடம் தொடர் சிகிச்சை பெற்று வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

    இந்த காய்ச்சல் வீட்டில் ஒருவருக்கு வந்தால் தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவரையும் பாதிக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    ஆகவே சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த நகர் முழுவதும் கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டுமென பரமக்குடி பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    Next Story
    ×